ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? ச...
இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்பினார். மேலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ராகுல் காந்தி பொறுத்தவரை வெளிநாட்டினர் அவருடைய சொந்தமாகவும், இந்தியர்கள் அந்நியமாகவும் கருதுகிறார்.
கசப்பான உண்மை என்னவென்றால், தனது தலைமைத்துவத் திறமையின்மையை மறைக்க வீண் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் சுற்றித் திரிகிறார், ஆனால் அது அவருக்குப் பயனளிக்கப் போவதில்லை.
நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ யாரும் அவரை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை, ராகுல் அலட்சியத் தலைவராகவே பார்க்கப்படுகிறது. இந்த உணர்வு பல காங்கிரஸ் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
50-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும், ராகுல் குடும்பத்தைக் கேள்வி கேட்கத் துணியவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.