செய்திகள் :

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

post image

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் இருந்த ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே கடந்தாண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் பொறுப்பேற்ற நிலையில், கொலைக்கு காரணமான 23 பேரை இதுவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, ஸீஷான் சித்திக்கையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் தலைமையிலான டி கம்பெனி எனப்படும் கும்பலிடம் இருந்து ஸீஷான் சித்திக்கிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது.

அந்த மின்னஞ்சலில், “பாபா சித்திக் கொலையின் பின்னணியில் பிஸ்னோய் குழுவினர் இருப்பதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. உங்களின் குடும்பத்தை எதுவும் செய்யாமல் இருக்க ரூ. 10 கோடியை இரண்டு நாள்களுக்குள் அளிக்க வேண்டும்.

தயவுசெய்து காவல்துறையிடம் செல்ல வேண்டாம். நீங்களும் கொலை செய்யப்படலாம். கவனமாக இருங்கள். ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் கேட்கலாம். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். நேரம் மற்றும் இடத்தை அனுப்புகிறோம். உங்களின் பதிலை தெரியப்படுத்தவும், இப்படிக்கு டி கம்பெனி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நினைவூட்டல் மின்னஞ்சல் வந்த நிலையில், காவல்துறையில் ஸீஷான் சித்திக் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

உலக அளவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தாவூத்தை அமெரிக்காவின் எஃப்பிஐ, இந்திய காவல்துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!

மும்பை: 10 கிராம் தங்கத்தின் விலை சில்லறை சந்தையில் முதல்முறையாக ரூ. 1 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களால... மேலும் பார்க்க

இந்தியர்களை அந்நியர்களாக நடத்துகிறார் ராகுல்: உ.பி. துணை முதல்வர்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா அவரை குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவிற்குச் சென்றுள்ள ராகுல் காந்தி மகாராஷ்டிர சட்டப... மேலும் பார்க்க

தொழிலதிபர், மனைவி கொடூரக் கொலை! ஆயுதங்களை விட்டுச் சென்ற கொலையாளிகள்!

கேரளத்தில் தொழிலதிபரும் அவரது மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க