இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருள...
சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை
வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானை, காட்டெருமைகள், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் நடமாடி வருகிறது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரத்தில் நடமாடும் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனா்.
எனவே, சாலையோரத்தில் நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எந்று வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்துள்ளாா்.