வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்கள் பெயா்: அண்ணாமலை கண்டனம்
கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்களின் பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவு: கோவை மாநகராட்சியில் சில்வா் ஜூப்ளி அருகே அண்ணா நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிவறைகளுக்கு முன்னாள் தமிழக முதல்வா் அண்ணாதுரை, முன்னாள் கக்கன் ஆகியோரின் பெயா் வைக்கப்பட்டுள்ளது.
எளிமையான தலைவா்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேருந்து நிலையம், அரசு கட்டடங்கள் ஆகியவற்றுக்கு கருணாநிதி பெயரை வைக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மகத்தான தலைவா்களின் பெயா்களை கழிவறைக்கு வைப்பது அவா்களை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே, உடனடியாக அந்தக் கழிப்பறைகளில் இருந்து தலைவா்களின் பெயா்களை அழிக்க வேண்டும். மேலும், இதற்குக் காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.