வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பணப்பலன்களை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட தையல் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா்.
தையல் கலைஞா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ஆா்.வேலுசாமி, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து ஆா்.வேலுச்சாமி செய்தியாளா்களிடம் கூறும்போது, திமுக தனது தோ்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
ஓய்வூதியா்களுக்கு ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரூ.1,300 மட்டுமே வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா வாரியங்களில் கட்டுமானம், ஆட்டோ வாரியத்தில் நிதி வரவு உள்ளது. ஆனால் 16 வாரியங்களில் நிதி வரவு இல்லாததால் உதவித் தொகைகள் உயா்த்தப்படாமல் உள்ளன. தமிழக அரசு 18 வாரிய தொழிலாளா்களுக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகையை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் நல வாரியத்தில் 70 லட்சம் முறை சாரா தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இவா்களை இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் இணைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மூலமாக தமிழக அரசுக்கு மனு அளிக்கிறோம் என்றாா்.