அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஓப்போ நிறுவனத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஏப். 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தில், கே 13 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன், 7,000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது.
கேமராவுக்காக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஓப்போ நிறுவனத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது.
இதன் விலை என்ன? சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
Snapdragon 6 Gen 4 + VC Cooling + 7000mAh battery = all at ₹16,999/-#OPPOK13 is the upgrade you’ve been waiting for. Sale starts 25th April.#OPphone#LiveUnstoppable
— OPPO India (@OPPOIndia) April 21, 2025
Know more: https://t.co/O13McKde5Vpic.twitter.com/9l71gyJcFk
ஓப்போ கே 13 5ஜி திரையின் சிறப்புகள்
ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போனானது 6.67 அங்குல அமோலிட் திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு மிகவும் சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டது. 1,200 nits வெளிச்சத்தை உமிழும் வகையில் பிரகாசமுடையது. திரை முழுவதும் எச்டி அம்சமுடையது.
கேமராவின் சிறப்புகள்
ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போனானது பின்புறம் 50MP அல்ட்ரா கிளியர் லென்ஸ் உடனான கேமரா கொண்டது. 2MP கூடுதல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
சிறந்த செல்ஃபி படங்களுக்காக 16MP முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற ஒலி, மங்களான தன்மை போன்றவற்றை நீக்கிக்கொள்ளும் சிறப்பம்சம் உடையது.
பேட்டரி சிறப்பம்சம்
ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போன் 7,000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. 80W அதிவேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதாவது, அரை மணிநேரத்தில் 62% சார்ஜ் ஆகிவிடும் என ஓப்போ குறிப்பிடுகிறது.
இரு பக்கங்களிலும் ஒலிப்பெருக்கி உள்ளது. தூசு படிவதைத் தவிர்க்கும் வகையில் IP65 துசு தடுப்பான் பொருத்தப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
ஓப்போ கே 13 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 6வது ஜெனரேஷன் புராஸசர் கொண்டது. 256GB நினைவகத் திறனுடையது. 8GB செயலிகளுக்கான நினைவகம் கொண்டுள்ளது.
பயன்படுத்தும்போது உழிழப்படும் வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் 6000mm² திறனில் கிராஃபைன் தாள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் ஏற்படாது. ஏற்பட்டாலும் நீண்ட நேரத்துக்கு இருக்காது.
இந்திய சந்தைகளில் ரூ. 17,999-க்கு ஓப்போ கே 13 5ஜி கிடைக்கிறது. இது 8 GB - 128 GB நினைவகம் கொண்டது. 8GB - 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமெனில் ரூ. 19,999 செலுத்த வேண்டும்.
கருப்பு மற்றும் ஊதா என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. ஏப். 25 முதல் முன்பதிவு செய்யலாம்.
இதையும் படிக்க | ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?