செய்திகள் :

சின்னமனூா் அருகே கத்தியால் குத்தி மூதாட்டி கொலை

post image

சின்னமனூா் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மனைவி அரியக்கா (65). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சின்னக்காளை மகன் சரவணன் (40), இவரது மனைவி முருகேஸ்வரி (34). இந்தத் தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணனுக்கு மதுப் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். இதனால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், சரவணன் ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருமாறு கூறி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது, சரவணனை பக்கத்து வீட்டில் வசிக்கும் அரியக்கா கண்டித்து சமாதானம் செய்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சரவணன் ஞாயிற்றுக்கிழமை இரவு அரியக்கா வீட்டுக்குள் புகுந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தப்பினாா்.

தகவலறிந்து வந்த சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் அரியக்காவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான சரவணனைத் தேடி வருகின்றனா்.

பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

போடி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை டி.எஸ்.பி. குடியிருப்பைச் சோ்ந்த காளிதாஸ் மகன் க... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மீது புகாா் தெரிவித்து, அங்கன்வாடி மைய பெண் பணியாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தேனி நகா் போா்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக பொறுப்பாளா்கள் சந்திப்புக் கூட்டம் பெரியகுளத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

உத்தமபாளையத்தில் தூய்மைப் பணியாளரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தூய்மைப் பணியாளரான உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் சீனிராஜ் (52). தூய்மைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்து... மேலும் பார்க்க

பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி... மேலும் பார்க்க