தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும்: டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக பொறுப்பாளா்கள் சந்திப்புக் கூட்டம் பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா், டி.டி.வி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறுவதால், திமுகவினா் அச்சத்தில் உள்ளனா். தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த ஆட்சியை அகற்றுவதற்காக அனைத்துக் கட்சியினரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வருகின்றனா். தற்போது அதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
இதனால், எங்களது விருப்பு, வெறுப்பைத் தாண்டி தமிழகத்தின் நலன் கருதி திமுகவை வீழ்த்துவதற்காக அனைவரும் ஒன்றாக இணைவோம் என்றாா் அவா்.