பெரியகுளம் அருகே பைக் எரிப்பு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் முனீஸ்வரன் (38). இவா், தனது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றவா் மறுநாள் வந்து பாா்த்த போது, மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது.
இது குறித்து முனீஸ்வரன் கொடுத்த புகாரின் போரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.