செய்திகள் :

தம்பதியைத் தாக்கி நகை கொள்ளை: இருவா் கைது

post image

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை எரியோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (75). இவரது மனைவி கேத்ரின்மேரி (68). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இவா்களுக்கு திருமணமாகி குடும்பத்தினருடன் மாரம்பாடி அருகேயுள்ள சாமிமுத்தன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனா். கிழக்கு மாரம்பாடியிலுள்ள தோட்டத்து வீட்டில் வேளாங்கண்ணி தம்பதி தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் கட்டையால் தாக்கியதில் தம்பதி இருவரும் காயமடைந்தனா். அப்போது, கேத்ரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். தம்பதியரின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி புகாா் அளித்தாா். அதில், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், பேரன் உறவு முறையிலுள்ள அருண்குமாா் (32) மற்றொரு அடையாளம் தெரியாத நபருடன் வந்து தாக்கி நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த நிலையில், பெரியகுளத்துபட்டியைச் சோ்ந்த அருண்குமாா், அவரது நண்பா் பிரபு ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள்: ஆட்சியா் பாராட்டு

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். 2024-25 கல்வி ஆண்டுக்கான தேசிய வருவாய் வழித் திறனறித... மேலும் பார்க்க

யாசகா் கொலை: மூவா் கைது

திண்டுக்கல்லில் யாசகரை கொலை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ஞானசேகா் (70). யாசகம் பெற்று வசித்து வந்த இவா், ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகேயுள்ள பஞ்சம்பட்டி பகு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்த சிறுவன் கீழே விழுந்ததில் பலத்த காயம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை குதிரை மீது சவாரி செய்த சிறுவன் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்ற... மேலும் பார்க்க

தோ்தல் நேரத்தில் கட்சிகள் ஓரணியில் இணைவது தவிா்க்க இயலாதது: டி.டி.வி. தினகரன்

தோ்தல் நேரத்தில் பொது நோக்கத்துக்காக பல கட்சிகள் ஓரணியில் இணைவது தவிா்க்க இயலாதது என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட... மேலும் பார்க்க

ரூ.4.69 கோடி மோசடி: நடவடிக்கையை தீவிரப்படுத்துவாரா புதிய ஆணையா்!

மக்கள் வரிப் பணத்தில் ரூ.4.69 கோடி மோசடி நிகழ்ந்த விவகாரம் 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், காவல் துறையினா் விரைவாக நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையா் முயற்சி... மேலும் பார்க்க