செய்திகள் :

Pahalgam Attack: "தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இன்று அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவரவாதிகள் துப்பாக்குச் சூடு நடத்தியிருக்கின்றனர்.

தீவிரவாதிகளின் இந்தத் தீடீர் துப்பாக்கிச் சூட்டில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Pahalgam Attack

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியின் மனைவி மனைவி, "நான், எனது கணவர், எனது மகன் மூவரும் குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வந்திருந்தோம். இன்று (22.04.25) மதியம் 1.30 மணியளவில் திடீரென தாக்குதல் நடந்தது. சம்பவ இடத்திலேயே என் கண் முன்னே என் கணவர் துடித்து இறந்தார். இன்னும் என்னால் அதை நம்ம முடியவில்லை, ஏதோ கெட்ட கனவு போல் இருக்கிறது.

மூன்று, நான்கு பேர் எங்களை தாக்கினார்கள். நான் அந்தத் தீவிரவாதிகளிடம், 'என் கணவரைக் கொன்று விட்டீர்கள், எங்களையும் கொன்று விடுங்கள்' என்று சொன்னேன். அதற்கு, அங்கிருந்த ஒரு தீவிரவாதி, 'போ... இதைப் போய் மோடியிடம் சொல்லு' என்றான். அங்கிருந்த அப்பகுதி மக்கள்தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். என் கணவரின் உடலை மலையிலிருந்து, சீக்கிரம் கீழே கொண்டுவந்து சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உதவுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இரணுவத்தினர், மீட்புப் படையினர், பாதுகாப்பு படையினர் விரைந்து அப்பகுதிக்குச் சென்று பாதுகாப்பு பணியில், விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

representative image

இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டறிந்திருக்கிறார். அதேபோல அமித் ஷாவும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அமித் ஷா சம்பவ இடத்திற்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க

`அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதியுங்கள்; சாதி கொடுமைகளை கட்டுப்படுத்துக' - அரசுக்கு விசிக கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீராய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்துவது, கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான சட்டம் இயற்றுதல், ஆளுநரை நீக்குதல்,... மேலும் பார்க்க

பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாக... மேலும் பார்க்க

மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் த... மேலும் பார்க்க