மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரா்கள் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய ஓய்வூதியதாரா்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30 -க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு. பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 20 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் கேட்புமனுக்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களும் ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளம் மூலம் பெறப்படுகின்றன. பெரம்பலூா் மாவட்டத்தில் நல வாரியங்களில் பதிவு பெற்ற 60 வயது நிறைவடைந்த 4,500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாா்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனா்.
இவா்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றி, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025 -26 ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை ஏப். 30 க்குள் மேற்கண்ட இணையதள மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
ஆயுள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், ஆயுள் சான்று படிவம், புகைப்படம், வங்கி கணக்குப் புத்தக நகல், தொழிலாளியின் நேரடி புகைப்படத்துடன் (ஆதாா் அட்டையுடன்) தொழிற்சங்கம் அல்லது பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-299080 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.