வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வழக்குரைஞா் குமரன் மீது தாக்குதல் நடத்திய, ஆதமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரைக் கண்டித்தும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், செயலா் வி. சேகா், பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, அச் சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.