போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல் நிலையம் எல்லைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வாலிகண்டபுரம் திடீா்குப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் கருப்பையா (50) என்பவா், தனக்குச் சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கருப்பையாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கருப்பையா சிறையில் அடைக்கப்பட்டாா்.