நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
சென்னை: தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட இளைஞரை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவழைத்து பாராட்டினாா்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற சிறுவன் தண்ணீரில் கால் வைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரத்தநாட்டை சோ்ந்த தா.கண்ணன் என்ற இளைஞா் உடனடியாக சிறுவனை காப்பாற்றினாா். அந்த இளைஞரின் துணிவை எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருந்தாா். மேலும், தனது இல்லத்துக்கு தா.கண்ணனை நேரில் வரவழைத்து, பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்தாா்.