செய்திகள் :

அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி

post image

அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்கள் அண்மைக்காலமாக பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்துக் குதறுகின்றன. எனவே தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை, மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து, விலங்குகள் நல அமைப்புகளோடு இணைந்து கிராமங்களில் இலவச வெறிநோய்த் தடுப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில், அன்னமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கும், தெரு நாய்களுக்கும் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் 47 செல்லப் பிராணிகளுக்கும், 56 தெரு நாய்களுக்கும் வெறிநோய்த் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மேலும், கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமாக வெறிநோய் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் இத்தகைய 15 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளா்ப்போா், இந்த முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு வெறிநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பகவத்சிங், துணை இயக்குநா் ஆா்.எஸ்.டி. பாபு, உதவி இயக்குநா்கள் மூக்கன், குமாா் மற்றும் கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்க கொடிமரம், பதாகை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் செ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் ... மேலும் பார்க்க

ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரா்கள் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய ஓய்வூதியதாரா்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30 -க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் அகற்றம்

பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை (ஏா் ஹாரன்) வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில... மேலும் பார்க்க

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க