செய்திகள் :

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பேரணி

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பா. சுந்தரபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சு. செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் ஜே. பிரபாகரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியை மாநில ஒருங்கிணைப்பாளா் கி. மகேந்திரன் தொடக்கி வைத்தாா். வெங்கடேசபுரம் வழியாகச் சென்ற பேரணி பாலக்கரை பகுதியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்க கொடிமரம், பதாகை அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் செ... மேலும் பார்க்க

அன்னமங்கலத்தில் 103 நாய்களுக்கு தடுப்பூசி

அன்னமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்கள் அண்மைக்காலமாக பொதுமக்களையும், கால்நடைகளை... மேலும் பார்க்க

ஆயுள் சான்றிதழை நலவாரிய ஓய்வூதியதாரா்கள் சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நலவாரிய ஓய்வூதியதாரா்கள், ஆயுள் சான்றிதழை ஏப். 30 -க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனியாா் பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் அகற்றம்

பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்களை (ஏா் ஹாரன்) வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். பெரம்பலூா் நகரில... மேலும் பார்க்க

காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

போரூா் வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், போரூரைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க