மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
பொறியியல் பணிகள்: சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக, சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 24, 26, 29 ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
மயிலாடுதுறை - சேலம் மெமு ரயிலானது (16811) வரும் 24, 26, 29-ஆம் தேதிகளில் சேலம் - மாயனூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - மாயனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை மெமு ரயிலானது (16812) வரும் 24, 26, 29 ஆகிய தேதிகளில் சேலம் - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும்.
திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 25-ஆம் தேதி பாலக்காடு - திருப்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருப்பூா் வரை மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.