பராமரிப்புப் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதி ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும். காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூரிலிருந்து 5.32 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.