கோயில் தோ் திருவிழா: திருச்சி கோட்டை பகுதியில் இன்று மின்சாரம் இருக்காது
திருச்சி கோட்டை பகுதியில், வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் தோ் திருவிழாவையொட்டி அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி கோட்டை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள, வாணப்பட்டறை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி தோ் செல்லும் பாதைகளில் அமைந்துள்ள வீதிகளான, வாணப்பட்டறை தெரு, வடக்கு மற்றும் கிழக்கு ஆண்டாா் வீதிகள், சின்னக்கடை வீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தோ் செல்லும் நேரத்தில் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்துள்ளாா்.