செய்திகள் :

`அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதியுங்கள்; சாதி கொடுமைகளை கட்டுப்படுத்துக' - அரசுக்கு விசிக கோரிக்கை

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீராய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்துவது, கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான சட்டம் இயற்றுதல், ஆளுநரை நீக்குதல், அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி உள்ளிட்ட தீர்மானங்களை அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமையில் நிறைவேற்றியிருப்பது கவனம்பெற்றுள்ளது.

விசிக - கலந்தாய்வு கூட்டம்

கடந்த 2023 ஜூலை முதல் வி.சி.க-வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 144-ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் அதிகாரப் பரவலாக்களை கருத்தில்கொண்டு மா.செ-க்களின் எண்ணிக்கையை 234 ஆக உயர்த்த திட்டமிட்டிருப்பதோடு, மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும் ஆயத்தமாகி வருகிறது. இதற்கான கலந்தாய்வு கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அஷோக் நகர் அம்பேத்கர் திடலில் இன்று காலை நடைபெற்றது. நிறைவேற்றப்பட்டப் பட்ட 13 தீர்மானங்களில் நான்கு தீர்மானங்கள் தி.மு.க அரசை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

ஆளுநருக்கு கண்டனம்.. முதல்வருக்கு பாராட்டு!

ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கும் பாராட்டும், வக்பு திருத்த சட்டத்தின் மீதான தற்காலிக தடையை உச்ச நீதிமன்றம் நீட்டிக்க வேண்டும் என்பதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி மீது அவமதிப்பு வழக்கை தாமே முன்வந்து தொடர வேண்டும். அதோடு மாநில சுயாட்சிக் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு - முதல்வர் ஸ்டாலின்

அம்பேத்கர் சிலைக்கு அனுமதி வேண்டும்!

பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தி.மு.க அரசுக்கும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதன்படி,

அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்திருக்கும் ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இந்த வழக்கின் இறுதி முடிவு வெளியாகும் வரை கட்சி கொடியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு அரசை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது

புரட்சியாளர் அம்பேத்கரின் திரு உருவ சிலையை நிறுவுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் தடையை விலக்குவதோடு அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதிலும் பெருகிவரும் சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அம்பேத்கர் சிலை

காலம் தாழ்த்தாமல் சட்டம் இயற்றுக!

கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கிட நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது அந்த ஆணையமும் தனது அறிக்கையை அரசிடம் வழங்கி ஓராண்டாகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நீதிபதி கே. சந்துரு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் `ரோஹித் வெமூலா` சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்களுடன் வக்பு திறுத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதசார்பின்மையை பாதுகாக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் மே 31ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவித்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகள் அதிகரித்துவருவதாக தி.மு.க அரசுமீது விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டணிக் கட்சியான வி.சி.க தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது!

பல்லடம் அரசு மருத்துவமனையில் இயங்காத ஜெனரேட்டர்; செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாக... மேலும் பார்க்க

மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி, அவமரியாதையாக நடத்திய காவலர் - ஆட்சியர், இதையும் கவனிக்கலாம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமையான நேற்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் த... மேலும் பார்க்க

`ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு; ஜெகதீப் தன்கர் பங்கேற்பு' - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

தமிழ்நாட்டில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக ஆளுநருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அமைத்துள்ளனர். ஆளுநர்களின் ஒய்வு மட்டுமின்றி அலுவலக பணிகள், முக்கிய ஆலோசனை கூட்டங்களும் ஊட்... மேலும் பார்க்க

மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்யா

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, வாட்டிகன் நகர... மேலும் பார்க்க

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க