MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?
சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் இச்சேவைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த ரயிலில் மொத்தமாக 12 பெட்டிகளில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.







ஏசி வசதியுடன் கூடிய இந்த ரயில், அதிகாலை 5:45 மணிக்கு தாம்பரம் பணிமனையிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடைந்து, 7 மணிக்கு இங்கிருக்குந்து புறப்பட்டு 8:45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
மேலும், பிற்பகல் 3:45 மணிக்கும், இரவு 7:35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இந்த ஏசி ரயில் புறப்படும்.
அதேபோல், மறுமுனையில் செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5:45 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி இந்த ஏசி ரயில் புறப்படும்.
Cool Rides Ahead! ❄️
— Southern Railway (@GMSRailway) April 18, 2025
Chennai Division introduces its First Air-Conditioned EMU service!
Catch the inaugural ride from Chennai Beach at 07:00 hrs on 19th April 2025#SouthernRailway#Chennai#April2025pic.twitter.com/pr7O8wqp70
இந்த ரயில், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.
மேலும், இந்த ஏசி ரயிலில் அதிகபட்ச கட்டணமாக சென்னை கடற்கரை டு செங்கல்பட்டுக்கு வரை ரூ. 105 வசூலிக்கப்படும். தாம்பரம் டு செங்கல்பட்டு ரூ. 85-ம், தாம்பரம் டு எழும்பூர் ரூ. 60-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆகும்.
இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இந்த ஏசி புறநகர் ரயில் சேவையில் கட்டணங்கள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.