மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்பில் யானை நடமாட்டம்
பேச்சிப்பாறை அருகே தச்சமலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் யானை நடமாட்டத்தால் வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சேதமாகியுள்ளன.
பேச்சிப்பாறை அருகேவுள்ள பழங்குடி குடியிருப்பு மலைப்பகுதிகளான தச்சமலை, புன்னை மூட்டுத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து இரவு மற்றும் அதிகாலை வேளையில் ஒரு ஆண் யானை வாழை, மரவள்ளி, தென்னை, கமுகு உள்ளிட்ட பயிா்களை நாசம் செய்துள்ளது.
இப்பகுதிகளில் யானை புகாதவாறு தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.