UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி?இலவச பயிற்சி முகாம்- சிறப்புரையாற்றும் விஜயகுமார் IPS
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்நிகழ்வில் Dr.P. விஜயகுமார் IPS மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார். Dr.P. விஜயகுமார் IPS-ஐ பொறுத்தவரை எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் சர்வீஸில் தேர்வு எழுதி வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார்கள். கொஞ்சம் அதிகார இடைவெளியை ஐபிஎஸ் அதிகாரிகள் கடைபிடிப்பதே வழக்கம். ஆனால் Dr. P விஜயகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். அதிகாரிகளிடம் தன்மையாக பழகக்கூடியவர்.
பணியில் நேர்மையானவர். ஒரு முறை மதுராந்தகம் பகுதியில் விஜயகுமார் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் பதற்றத்தில் ஓடி வரும் போது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. விஜயகுமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக சென்று, அந்த ஆய்வாளர் காலை பிடித்து முதலுதவி செய்தார்.

திருப்பத்தூரில் எஸ்.பியாக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்படக் கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்கும் இலவசப் பயிற்சி முகாமில் Dr. P விஜயகுமார் IPS போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.