செய்திகள் :

IPL 2025: 'குஜராத்துக்கு பட்லர்; ஆர்சிபிக்கு ஹேசல்வுட்!'- ஐ.பி.எல் யை தவறவிடும் வீரர்களின் பட்டியல்

post image

இந்தியா - பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் வருகிற 17 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது.

IPL 2025
IPL 2025

இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்களில் யார் யாரெல்லாம் மீண்டும் ஐ.பி.எல் இல் ஆட வருவார்கள்? அப்படி ஆட வருபவர்களில் எல்லாருமே தொடர் முழுவதும் இருந்து ஆடுவார்களா? எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

மீண்டும் ஐ.பி.எல்... மிஸ்ஸாகும் வீரர்கள்!

மே 8 ஆம் தேதி பஞ்சாப் - டெல்லி இடையிலான போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. மறுநாளே ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பும் வெளியானது. உடனடியாக ஒவ்வொரு அணியின் வெளிநாட்டு வீரர்களும் அவரவர் நாட்டு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை சீரான நிலையில் மீண்டும் மே 17 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

Hazlewood
Hazelwood

இந்நிலையில்தான் வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட இந்தியா திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பினாலும் ப்ளே ஆப்ஸில் நிறைய வீரர்களால் ஆட முடியாத சூழல் நிலவுகிறது.

ஏனெனில், ஜூன் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. அதற்காக, இரு அணிகளும் மே கடைசி வாரத்தில் இருந்தே பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

Buttler
Buttler

அதேமாதிரி, இங்கிலாந்துக்கும் வெஸ்ட் இண்டீஸூக்கும் இடையேயான ஓடிஐ தொடரும் மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. ஆக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என 4 நாடுகளை சேர்ந்த வீரர்களும் ப்ளே ஆப்ஸில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

பெங்களூரு அணிக்காக ஆடி வரும் ஹேசல்வுட் காயத்தில் இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதேமாதிரி, டெல்லி அணிக்காக ஆடி வரும் ஸ்டார்க்கும் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் ஸ்டாய்னிஸ், ஜாஸ் இங்லிஸ் ஆகியோரும் இந்தியாவிற்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Starc
Starc

குஜராத்துக்காக ஆடி வரும் பட்லர், ரூதர்போர்ட் பெங்களூருவுக்காக ஆடி வரும் ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி இங்கிடி மும்பை இந்தியன்ஸின் வில் ஜாக்ஸ், கார்பின் போஸ்ச் ஆகியோர் ப்ளே ஆப்ஸ் சமயத்தில் இருக்கமாட்டார்கள் என்பதே இப்போதைய நிலவரமாக இருக்கிறது. சென்னை அணியின் ஜேமி ஓவர்டனும் ரச்சின் ரவீந்திராவும் மட்டுமே இந்தியாவுக்கு திரும்புவது சந்தேகமாக இருக்கிறது.

ப்ளே ஆப்ஸ் செல்லும் அணிகள் சில முக்கிய வீரர்களை இழப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகவே அமையும்.!

IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacement விதி என்ன?

'மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வருகிற மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்... மேலும் பார்க்க

`உங்க அடுத்த அத்தியாயத்திலும் வெற்றிபெற..!’ - ரோஹித் சர்மாவை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய பட்னாவிஸ்

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்ட... மேலும் பார்க்க

IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவிவரம்!

'புதிய அட்டவணை!'இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவந்த பதற்றமான சூழல் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.... மேலும் பார்க்க

Kohli : '12 ஆண்டுகளுக்கு முன் நீ கொடுத்த அந்த கயிறு..!' - கோலியின் ஓய்வு குறித்து நெகிழும் சச்சின்

'கோலி ஓய்வு!'இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு சச்சின் ஒரு நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியை பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க