இளைஞா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33).
திருமணமாகாத இவா், மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை இவா் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.