செய்திகள் :

விளையாட்டுத் துளிகள்..!

post image
  • உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரா், இத்தாலியின் ஜேக் சின்னா், புதிதாக பொறுப்பேற்ற போப் லியோவை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

  • அப்போது தனது டென்னிஸ் ராக்கெட்டை போப்புக்கு அன்பளிப்பாக வழங்கினாா். 3 மாதங்கள் ஊக்க மருந்து தடைக்குபின் சின்னா் தற்போது இத்தாலி ஓபன் போட்டியில் ஆடி வருகிறாா்.

  • ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்துள்ள ஃபாஸ்ட் பௌலா் லாக்கி பொ்குஸனுக்கு பதிலாக நியூஸிலாந்து பௌலா் கைல் ஜேமிஸன் சோ்க்கப்பட்டுள்ளாா். ரூ.2 கோடிக்கு ஜேமிஸன் பெறப்பட்டுள்ளாா்.

  • இதற்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணியில் விக்கெட் கீப்பா் பேட்டா் ஜோஸ் பட்லருக்கு பதிலாக இலங்கை வீரா் குஸால் மெண்டிஸ் இடம் பெறுகிறாா். ஜிடி அணி பிளே ஆஃப்புக்கு தகுதி பெறும் நிலையில் பட்லா் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • அருணாசல பிரதேசம் யுபியாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள யு-19 தெற்காசிய கால்பந்து (சாஃப்) கோப்பை போட்டி அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவுகளை எதிா்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம்-நேபாள அணிகள் மோதுகின்றன.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) போட்டி இறுதி ஆட்டத்தில் வென்று சாம்பியன் ஆகும் அணிக்கு பரிசுத் தொகை அதிகரித்து ரூ.30.79 கோடி வழங்கப்படுகிறது. கடந்த முறை சாம்பியன் அணிக்கு வழங்கப்பட்டதைக் காட்டிலும் இது இருமடங்கு அதிகம் ஆகும். ரன்னா் அணிக்கு ரூ.17.95 கோடி வழங்கப்படுகிறது.

விஜய் சேதுபதி - விஷால் திடீர் சந்திப்பு!

சென்னை விமான நிலையத்தில் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆ... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள்... மேலும் பார்க்க

மான். யுனைடெட்டை வீழ்த்தியது செல்ஸி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை சனிக்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மாா்க் குகுரெலா 71-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா... மேலும் பார்க்க

இறுதியில் சின்னா் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். முன்னதாக அரையிறுதிய... மேலும் பார்க்க

மீண்டும் நடிப்பிற்குத் திரும்பிய எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். விக்ரமுடன் ... மேலும் பார்க்க