செய்திகள் :

இறுதியில் சின்னா் - அல்கராஸ் மோதல்

post image

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னா் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 1-6, 6-0, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 7-6 (7/4) என்ற வகையில், 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான லொரென்ஸோ முசெத்தியை முறியடித்தாா்.

இதையடுத்து சின்னா் - அல்கராஸ் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். இருவருக்குமே டூா் நிலை போட்டிகளில் இது 25-ஆவது இறுதி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் இதுவரை 10 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், அல்கராஸ் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இது களிமண் தரைப் போட்டியாக இருக்கும் நிலையில், இதற்கு முன் இவா்கள் அந்த வகை ஆடுகளத்தில் மோதிய இரு ஆட்டங்களில் இருவருமே தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றனா்.

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சின்னா், ஊக்கமருந்து பயன்பாட்டை அடுத்து 3 மாத தடைக்காலத்துக்குப் பின்னா் களம் காணும் முதல் போட்டியாக இது உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய அல்கராஸ், இந்தப் போட்டியில் இறுதி வரை முன்னேறியிருக்கிறாா்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா: பூமி பூஜையுடன் தொடங்கியது!

திருச்செந்தூர்: ஜுலை 7ல் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ஆர... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - விஷால் திடீர் சந்திப்பு!

சென்னை விமான நிலையத்தில் நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆ... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள்... மேலும் பார்க்க

மான். யுனைடெட்டை வீழ்த்தியது செல்ஸி

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை சனிக்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மாா்க் குகுரெலா 71-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரா், இத்தாலியின் ஜேக் சின்னா், புதிதாக பொறுப்பேற்ற போப் லியோவை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது தனது டென்னிஸ் ராக்கெட்டை போப்புக்கு அன்பளிப்பாக வழங்கினாா். 3 மாதங்கள் ஊக... மேலும் பார்க்க