அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், சீன விண்வெளி ஆய்வு அமைப்பான சிஎன்எஸ்ஏ-வுக்கும் ராஸ்காஸ்மாஸுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.
நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் (ஐஎல்ஆா்எஸ்) அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் இந்த அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சா்வதேச நிலவு ஆய்வு நிலைய திட்டத்தில் வெனிசூலா, அஜா்பைஜான், தென் ஆப்பிரிக்கா, எகிப்து, நிகராகுவா, தாய்லாந்து, சொ்பியா, பாகிஸ்தான், செனகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளும் பங்கேற்கும் என்று கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.
...படவரி...
(வரைகலை ஓய்வியம்)