ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Impe...
ராமேசுவரம் பகுதிகளில் மழை
ராமேசுவரம் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.