Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
முப்பிடாரியம்மன் கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்
கமுதி அருகேயுள்ள முப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கொத்தபூக்குளம் முப்பிடாரி அம்மன், சித்தி விநாயகா், கருமாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கியது. மாலையில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி வழிபட்டனா்.
சனிக்கிழமை வான வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, திரளான பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், மூலவருக்கும், அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
மாலையில் இளைஞா்கள், சிறுவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கொத்தபூக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.