தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது
``எங்க அப்பா கட்டுமான வேலைக்காக தமிழ்நாடு வந்தாங்க..'' - தமிழில் 93% மதிப்பெண் எடுத்த பீகார் மாணவி
சென்னையில் உள்ள கவுல் பஜார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பீகாரைச் சேர்ந்த மாணவி ஜியா குமாரி படித்து வருகிறார்.
இவர் தற்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 467 மதிப்பெண்ணும் தமிழில் 93 மதிப்பெண்ணும் எடுத்து அசத்தி இருக்கிறார்.
ஜியா குமாரி பீஹார் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான கூலித்தொழிலாளியின் மகள்.

இவர் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
500-க்கு 467 மதிப்பெண்ணும் தமிழில் 93 மதிப்பெண்ணும் எடுத்தும் அசத்திய ஜியா குமாரியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய ஜியோ குமாரி, “ எனது தந்தை 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான வேலைக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தார். தமிழகத்தில் அரசு பள்ளிகள் நன்றாக இருப்பதை கேள்விப்பட்டு நானும் எனது இரண்டு சகோதரிகளும் சென்னைக்கு வந்தோம்.
எனது தந்தை கூலி வேலை செய்கிறார். அவரால் தனியார் பள்ளியில் பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாது.
தமிழ் நிச்சயமாக ஹிந்தியை விடக் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதும், அது எளிதாகிவிடும்.
இங்குள்ள அனைவரும் தமிழில் மட்டுமே என்னிடம் பேசினார்கள். நானும் அவர்களுடன் பேசி தமிழை கற்றுக்கொண்டேன்.

வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் தான் எளிதான பாடமாக இருந்தது.
நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசியும், எழுதியும் வருகிறேன்.
11,12ம் வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். நான் டாக்டர் ஆக விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.