செய்திகள் :

``தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்” - மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற தூத்துக்குடி மாணவி ரேஷ்மா

post image

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியானது. அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம், 3-வது இடத்தையும், அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 95.40 சதவீதம் பெற்று 5-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகளும், 89 அரசுப் பள்ளிகளில் 35 பள்ளிகளும்  100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாணவி ரேஷ்மா

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் உள்ள பிரசன்னா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா, 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி நவநீதன் மற்றும் சக ஆசிரிய ஆசிரியைகள் வாழ்த்தினர்.

மாணவி ரேஷ்மாவிற்கு வாழ்த்துக்களைச் சொல்லி பேசினோம், “எங்க அப்பா முத்துக்குமார் புதியம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்க்குறாங்க. அம்மா முத்துலெட்சுமி  டெய்லரிங் செய்யுறாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருமே 12-ம் வகுப்புக்கு மேல படிக்கல. “படிப்புதான்மா முக்கியம். படிப்புதான் நம்மளை முன்னேற்றும்”னு அடிக்கடி சொல்லுவாங்க. அதனால நல்லா படிக்கணும்னு வைராக்கியத்தோட படிச்சேன். என்னோட ஆசிரியர்களும் எனக்கு நல்லா சொல்லிக் கொடுத்தாங்க.

ஆசிரியைகளுக்கு பாராட்டு

“முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய். முடியலேன்னா பயிற்சி செய்”னு எங்க ஆசிரியர்கள் சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் முயற்சி, பயிற்சி ரெண்டுமே முக்கியம். தினமும் காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் 7 மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பிச்சிடுவேன்.

தினமும் நடத்துற பாடங்களை அன்னைக்கே படிச்சிட்டாலே போதும். கணக்கு பாடத்துல கணக்குகளை செஞ்சு பார்க்க அதிகாலை நேரம் உகந்தது. ஆங்கிலப் பாடமும் அப்படித்தான். நம்ம தனியா படிக்கிறதை விட, நம்ம நண்பர்களுக்கும் அதை சொல்லிக்கொடுத்தா நம்ம மனசுலயும் நல்லாப் பதியும்.   

பொதுவா இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற  ஸ்டூடண்ட்ஸ் தமிழ் பாடத்துல  அதிக ஈடுபாடு இல்லாம இருப்பாங்கன்னு சொல்லுவாங்க.

எங்க ஸ்கூல்ல தமிழ்பாடத்துலகூட ஸ்டூடண்ட்ஸ் மார்க் குறைஞ்சுடக்கூடாதுன்னு  தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. வாசிப்பு பயிற்சி, எழுத்துப் பயிற்சி, மனப்பாட பயிற்சிதான் முக்கியமானது.  தமிழ்ல  உரைநடையை விட செய்யுள், இலக்கணப் பகுதிகள் கடினமா இருக்கும்னு நிறைய ஸ்டூடண்ட்ஸ் தவறா நினைக்கிறாங்க.

பிரசன்னா மெட்ரிக் பள்ளி

பக்திப்பாடல், சினிமாப் பாடல்களை  மனசுக்குள்ள பதிய வச்சுட்டு வாய்குள்ள முணுமுணுக்குற மாதிரி செய்யுள்கள்ல உள்ள மனப்பாடப் பாடல்களை மனசுக்குள்ள பதிய வச்சாலேப் போதும்.

இங்கிலீஷ் கிராமர் மாதிரியேதான் தமிழ் இலக்கணமும். தமிழைப் பொறுத்தவரை வரிவரியா தெளிவா வாசிச்சிக்கணும், வாசிச்சதை  பொருள் புரிஞ்சு பிழையில்லாம எழுதிப் பார்க்கணும். பிழையே இல்லேங்கிற நிலை வர்ற வரைக்கும் திரும்பத் திரும்ப எழுதிப் பழகணும்.

தமிழ்ங்கிறது வெறும் மதிப்பெண்ணுக்கானது மட்டுமில்ல. டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகள்ல தமிழ் பாடத்துக்கும் முக்கியத்துவம் இருக்கு. 

பட்டப்படிப்பு வரைக்கும் படிச்சவங்கக்கூட போட்டித் தேர்வுல தமிழ்பாடத் தயாரிப்புக்காக  திணறிப் போறாங்க. அதனால, தமிழை  நல்லாப் படிச்சா வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்கும். என்னோட இந்த சாதனைக்கு தலைமை ஆசிரியை, நண்பர்கள், அம்மா, அப்பா எல்லாரும்தான் காரணம்.

பள்ளி ஆசிரியர்களின் பாராட்டு

என்னோட  அண்ணன் ரமேஷ் இதே ஸ்கூல்ல 12-ம் வகுப்புல 600-க்கு 580 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம் வந்திருக்காங்க. டாக்டர் ஆகணும்கிறதுதான் என்னோட லட்சியம்” என பெருமை படச் சொல்கிறார் ரேஷ்மா.

முதல் ஆளாகா த.வெ.க கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் ஆஜிதா ஆக்னல் மாணவியை பாராட்டியதுடன் தேவைப்படும் உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

``எங்க அப்பா கட்டுமான வேலைக்காக தமிழ்நாடு வந்தாங்க..'' - தமிழில் 93% மதிப்பெண் எடுத்த பீகார் மாணவி

சென்னையில் உள்ள கவுல் பஜார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பீகாரைச் சேர்ந்த மாணவி ஜியா குமாரி படித்து வருகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 467 மதிப்பெண்ணும் தமிழில் ... மேலும் பார்க்க

மதுரை மத்தியச் சிறை: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி; சிறைத்துறையினர் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மதுரை மத்திய சிறைவாசிகள் அனைவரும் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் அதிகம... மேலும் பார்க்க

SSLC Exam: `` சிவகங்கை முதலிடம்; வெற்றிக்கு காரணம்..'' - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி

பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.அதுமட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் 97.49 சதவிகிதம் தேர்ச்சி வி... மேலும் பார்க்க

10th Result: இணை பிரியாத இரட்டை சகோதரிகள்; இருவருக்கும் 474 மதிப்பெண்கள்.. அசத்தல் ஒற்றுமை..!

கோவையில், திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சுந்தரராஜன் – செல்வி தம்பதியினர் உள்ளனர். இவர்களின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்புபடி... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்கள்..

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 மு... மேலும் பார்க்க

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு முடிவில் மா... மேலும் பார்க்க