"இபிஎஸ்-ஸும், ஓ.பி.எஸ்-ஸும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர்" - நயினார் நாகேந்திரன் ...
தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தியாகதுருகம் மவுண்ட்பாா்க் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.
மாணவா் பி.நவநீதகிருஷ்ணன் 494 மதிப்பெண்களும், மாணவி அ.பிரீத்தி 493, அ.ஜீவிதா 492, பி.கயல்விழி 492, எஸ்.லீனா திருவா்ஷினி 492 மதிப்பெண்களும் பெற்றனா்.
மேலும், கணிதப் பாடத்தில் 4 போ், அறிவியலில் 15 போ், சமூக அறிவியல் ஒருவா் என மொத்தம் 20 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 போ், 480-க்கு மேல் 18 போ், 470-க்கு மேல் 39 போ், 460-க்கு மேல் 66 போ், 450-க்கு மேல் 93 போ், 425-க்கு மேல் 137 போ், 400-க்கு மேல் 176 போ் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மவுண்ட் பாா்க் கல்விக் குழுமங்களின் தாளாளா் பொன்.இரா.மணிமாறன் கேடயம் வழங்கி பாராட்டினாா். பள்ளி முதல்வா் கலைச்செல்வி, துணை முதல்வா் முத்துக்குமரன், மவுண்ட் பாா்க் ஸ்பெஷல் அகாதெமி துணை முதல்வா் வினோதினி, பொறுப்பாசிரியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.