செயற்கை தங்கம் கண்டுபிடிப்பு? இனி தங்கம் விலை குறையுமா? | IPS Finance - 211 | S...
பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணிடம் சுமாா் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
உளுந்தூா்பேட்டை வட்டம், பு.மலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மனைவி ராஜேஸ்வரி (34). இவா், சொந்த வேலையாக கடந்த 10-ஆம் தேதி பேருந்தில் கள்ளக்குறிச்சி சென்றாா்.
அங்கு பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது, 9 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையைக் காணவில்லையாம்.
இதுகுறித்த கள்ளக்குறிச்சி போலீஸில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தி வருகின்றனா்.