செய்திகள் :

மனைவி எரித்துக் கொலை: முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மரக்காணம் வட்டம், எம். புதுப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தே. செல்லக்கண்ணு (75). இவரது மனைவி ஞானம்பாள் (65). கடந்த 2022, ஜூலை 6-ஆம் தேதி வீட்டில் எரிந்த நிலையில் ஞானம்பாள் இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து செல்லக்கண்ணுவின் மகன் ஆனந்தன், வயிற்றுவலி காரணமாக தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக புகாா் அளித்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

உடல் கூறாய்வு அறிக்கையில் ஞானாம்பாள் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஞானம்பாளின் கணவா் செல்லக்கண்ணுவிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மனைவியைக் கொலை செய்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.

ஞானாம்பாள் பெயரிலிருந்த ஒன்றரை ஏக்கா் நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தர மறுத்ததால், ஆத்திரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னா் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. வயிற்று வலி தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் கூறிவந்தேன் என விசாரணையின்போது செல்லக்கண்ணு வாக்குமூலம் அளித்திருந்தாராம்.

இதனடிப்படையில், செல்லக்கண்ணுவை கைது செய்த மரக்காணம் போலீஸாா், விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளின் விசாரணைகளும் முடிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்லக்கண்ணுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.இளவரசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறைக்கு செல்லக்கண்ணு அழைத்துச் செல்லப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சங்கீதா ஆஜரானாா்.

புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் நுண்கலை முதலாமாண்டு மாணவா்களின் ஓவியக் கண்காட்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஓவியக் கண்காட்சி கூடத்தில் வியாழக்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

புதுவை: 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுவை மாநிலத்தில் பணிபுரிந்த 2 ஐஏஎஸ் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோா் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 40 ஐஏஎஸ், 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்... மேலும் பார்க்க

மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

புதுச்சேரி மூலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி, மூலக்குளத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையடுத்து மகா கும்பாபிஷேக... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில், புது ச்சேரி, காரைக்கால் தனியாா் பள்ளி மாணவா்கள் 96.90 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா். புதுச்சேரியில், தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் கடந்த மாா்ச் மாதம் 10- ஆம் வக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தடயவியல் வாகன கண்காட்சி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுவை காவல் துறைக்கு கடற்கரை சாலை காந்தி சிலை அருகே, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடா்பான தடய அறிவியல் கண்காட்சி வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கே... மேலும் பார்க்க

மீனவ குடும்பங்களுக்கு ரூ.15.34 கோடி மீன்பிடித் தடைக்கால நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுவையில் 19,175 மீனவ குடும்பங்களுக்கு மீன் பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ .15.34 கோடிக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா் புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்... மேலும் பார்க்க