புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்
Maaman: "கதை நன்றாக இருந்தால் படம் ஓடப் போகுது; இப்படி பண்றது முட்டாள்தனம்" - கண்டித்த சூரி
சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்வாசிகா, பாலசரவணன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமாக 'மாமன்' உருவாகியிருக்கிறது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த விஷயத்தைக் கண்டித்து காட்டமாக பேசியிருக்கிறார் சூரி.
ரொம்ப முட்டாள்தனமானது
சூரி பேசுகையில், " இந்த படம் வெற்றியடையணும்னு என்னுடைய ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டிருக்காங்க. இது ரொம்ப முட்டாள்தனமானது.
என்னை ஆச்சரியப்படுத்தணும், படம் நல்லா ஓடணும்னு ஒரு விஷயத்தை பண்றீங்க. ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அது ஓடப் போகுது. மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடப்போகுதா என்ன? இந்த காசுக்கு சிலருக்கு தண்ணீர் வாங்கிக் கொடுத்திருக்கலாம், சாப்பாடு கொடுத்திருக்கலாம்.
இப்படியான விஷயங்கள் பண்றவங்க என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்கு தகுதி இல்லாதவங்க. நான் உணவை ரொம்ப மதிக்கிறவன்.

நான் உணவுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். கடினமாக உழைச்சதுனாலதான் மக்கள் என்னை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்காங்க. அப்படி இருக்கும்போது அந்த சாப்பாட்டுக்கு மரியாதைக் கொடுக்கவே இல்ல.
தவறான செயலைப் பண்ணி என்னை கஷ்டப்படுத்திட்டாங்க. நல்ல படங்களை பாருங்க கொண்டாடுங்க. உங்க வாழ்க்கையும் இருக்கு. அதையும் பாருங்க!" என கோபத்துடன் பேசினார்.