செய்திகள் :

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் சொத்து மதிப்பு, வருமானம் எவ்வளவு தெரியுமா?

post image

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் வருமானம் குறித்தும், எப்படி வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.

மறைந்த போப் பிரான்ஸ் தனது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்து நிதி சார்ந்த விவகாரங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

1967 ஆம் ஆண்டு அப்போஸ்தலிக் சீயின் சொத்துகளை பராமரிக்க நிர்வாகம் அமைக்கப்பட்ட பிறகு அதன் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

அப்போஸ்தலிக் சீ என்பது திருச்சபையில் அதிகாரத்தின் ஒரு மையமாகும்.

வாடிகன் சிட்டி

இந்த சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகம் (APSA) வெளியிட்ட அறிக்கையின் படி, வாடிகன் நாடால் நடத்தப்படும் தேவாலய கிளையின் மொத்த லாபம் 52 பில்லியன் டாலருக்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.

சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகத்தின் தகவலின்படி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை திருச்சபை நிர்வகித்து அதிலிருந்து வருமானம் ஈட்டுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஐந்தில் ஒரு பங்கை வாடகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் 84 மில்லியன் டாலர் வருமானம் வருவதாக சொத்துகளை பராமரிக்கும் நிர்வாகம் கூறுகிறது.

இந்த விவரங்கள் அனைத்தும் வாட்டிகனின் நிதி அமைப்புடன் தொடர்புடையவை மட்டுமே உலகில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் மற்ற கிளைகளின் கணக்கு இதில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவும் திருச்சபையின் மற்றொரு வருமானமாக உள்ளது

வாடிகனில் உள்ள மதம் மற்றும் வரலாற்று கட்டிடங்கள், அருங்காட்சியங்கள், நூலகங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் இடமாக உள்ளது. இதன் மூலமும் வருமானம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

சொத்துக்களின் நிகர மதிப்பு அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாக்கடைக்கு அடியில் இப்படி ஓர் இடமா? - இரண்டாம் உலகப் போரிலிருந்த இடத்தை கண்டுபிடித்த ஆய்வாளர்!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்த ஒரு ரகசிய நிலத்தடி மருத்துவமனையை ஜெர்மனை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.ஜெர்மன் ஆய்வாளரான கார்ஸ்டன் ராபர்ட் என்பவர் கைவிடப்பட்ட ம... மேலும் பார்க்க

காட்டிக்கொடுத்த வீடியோ; பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தாரா ஹரியானா பெண்? கைது செய்யப்பட்ட பின்னணி

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி சொந்தமாக Travel With Jo என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவில் உளவு பார்த்து முக்கிய... மேலும் பார்க்க

கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய திருமண வீடு

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் அருகில் உள்ள ஜம்கந்தி என்ற இடத்தில் பிரவின் என்பவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.திருமண ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்தன. மணமகன் மற்றும் மணமகள் என இரண்... மேலும் பார்க்க

குடியிருப்புக்குள் நுழைந்து இரைதேடிய இரண்டு சிறுத்தைகள்; பதற வைக்கும் காட்சி; எச்சரிக்கும் வனத்துறை

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகு... மேலும் பார்க்க

மும்பை: ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்; அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி; மருத்துவர்கள் சொல்வது என்ன?

பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறப்பது மிகவும் அபூர்வம். அதுவும் ஒரு லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை மட்டுமே இது போன்று பிறக்க வாய்ப்பு இருக்கிறது. மும்பையில் ஏற்கனவே கடந்த 13 ஆண்டுக்கு... மேலும் பார்க்க

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்... ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க