செய்திகள் :

ஐஸ் க்ரீம், பால் க்ரீம், ரோஸ் மில்க், பாதாம் பால்; லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்; நேரடி பயிற்சி

post image

பாலை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டல் செய்யலாம், அதை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து நேரடி செயல் விளக்க பயிற்சி மே 23ம் தேதி சென்னை அடுத்த அலமாதியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியில் ஐஸ் க்ரீம், பனீர், பால் க்ரீம், ரோஸ் மில்க், பாதாம் பால் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகள் குறித்து நேரடி பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி அறிவிப்பு

வருகிற வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. ஒரு பொருளை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்புக் கூட்டும்போது அதைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. அதன் செல்ப் லைப்பும் அதிகமாகிறது. இதை லாபகரமாக எப்படி செய்வது, என்னமாதிரியான யுக்திகளை கையாள வேண்டும் என்பதற்கான செயல்விளக்கங்கள் இதில் இடம் பெற உள்ளன.

குறைந்த முதலீட்டில் ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கான வழிமுறைகள், பனீர் தயாரிப்பு பற்றிய செயல்முறைகள் ஆகியவை குறித்து கல்லூரி பேராசிரியர்கள் நேரடி விளக்கம் அளிக்க இருக்கிறாரகள். பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுக்கும் முறை (cream separator) பற்றி விளக்கம், அப்படி பிரித்து எடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதாம் பால், ரோஸ் மில்க் விற்பனைக்கு ஏற்றவாறு எப்படி தயாரிப்பது பற்றி செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த செயல்முறையில் உங்களுக்கு எதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதற்கும் விளக்கம் அளிக்கப்படும்.

மேலும் இக்கல்லூரியில் உள்ள மதிப்புக் கூட்டல் செய்யும் இயந்திரங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த கல்லூரியில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள மற்றும் பிசினஸ் வழிகாட்டல் செய்வதற்கும் தேவைப்படும் பிசினஸ் இன்குபேஷன் உறுப்பினர் ஆவதற்கான வழி காட்டல்கள் இக்கல்லூரியில் உள்ள பேராசிரியர்களால் சொல்லி கொடுக்கப்படும்.

பயிற்சி அறிவிப்பு

எப்படி கலந்து கொள்ளலாம்!

இந்தப் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள பயிற்சி கட்டணமாக ரூபாய் 1,200 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும், மேலும் விவரங்களுக்கு 9940022128 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு வழங்கப்படும்.

இந்த பயிற்சியானது திருவள்ளூர் மாவட்டம், அலமாதி- கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பாலவளத் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ஜெர்மன், இஸ்ரேல் வேலை வேண்டாம்! - நாடு முழுவதும் தேனிக்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் விஞ்ஞானி

விவசாயத்திற்கு தேனிக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மாறி வரும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் தேனிக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டத... மேலும் பார்க்க

ஊட்டி‌: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி‌ ரூ.‌ 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் விலை; காரணம் என்ன?

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக சைனீஸ் கேபேஜ்... மேலும் பார்க்க

"ஒருவரின் தவறால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது!" - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜேந்திர ஸ்டேடியம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிணைந்து, தங்களது தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.ஜெயமணிசெங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி, தங்கச் சம்பா, பாஸ்மதி விதைநெல் மற்றும் செம்மரங்கள்.ஆர்.செந்தமிழ்செல்வன்,திருவையாறு,தஞ்சாவூர்.96885 25605நல்ல நில... மேலும் பார்க்க

வங்கி பணியை உதறிவிட்டு விவசாயம்; மருந்து தெளிக்க ஹெலிகாப்டர் - ரூ.70 கோடி வருவாய் ஈட்டும் பட்டதாரி

இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட விவசாயம் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். சிலர் லட்ச ரூபாய் சம்பளம் தரும் கார்ப்ரேட் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஷ்கர் ம... மேலும் பார்க்க