Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elango...
உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில நாள்களாக வேல்வியூ, லவ்டேல் பகுதிகளில் சுற்றி வருகிறது.
நகா் பகுதிக்கு வந்து விடாமல் வனத் துறை ஊழியா்கள் துரத்துவதாலும், குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாத வகையில் பொதுமக்கள் துரத்துவதாலும் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்ல முடியாமல் இங்கேயே சுற்றி வருகிறது.
இந்நிலையில், முதுமலையில் நல்ல பயிற்ச்சி பெற்ற வன ஊழியா்களைக் கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.