செய்திகள் :

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

post image

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்திவந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3 ஆம் தேதி கைதுசெய்து, சிறையில் அடைத்தனா்.

நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி மதிப்புள்ள தங்கநகை, ரொக்கப் பணத்தை கைப்பற்றினா்.

இதற்கிடையே டிஜிபி பதவியில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கே.ராமசந்திர ராவின் மகளான நடிகை ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் சோதனைகள் எதுவும் செய்யாமல் வெளியேற சிறப்புச் சலுகைகள் பெற்றது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், மூன்றுமுறை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏப். 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனிடையே, நடிகை ரன்யா ராவின் மற்றொரு ஜாமீன் மனுவை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த விசாரணையின்போது, நடிகை ரன்யா ராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் சி.கௌடா், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தாா். ஆனால், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ரூ. 2 லட்சத்திற்கான பத்திரம், 2 போ் ஜாமீன் அளிக்க வேண்டும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குற்றங்களை மீண்டும் செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடுமையான விதிகள் கொண்ட கோபிபோசா (அன்னியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974) சட்டத்தின் கீழ்

நடிகை ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதால், அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும் விடுதலை செய்யப்படமாட்டாா் என்றனா்.

இந்த சட்டத்தின் கீழ் ஓராண்டு வரை ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பின் அடிப்படையிலேயே நடிகை ரன்யா ராவ் சிறையில் இருந்து வெளியே வருவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வா்.

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக... மேலும் பார்க்க