Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்...
2 மாதங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் தக் லைஃப்!
தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபின் 2 மாதங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2.45 மணி நேரம் கால அளவு கொண்ட இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் திரையரங்களில் வெளியான நாளிலிருந்து 8 வாரங்கள் கழித்தே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறதாம்.
இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், “இது புதுமுயற்சி அல்ல. எங்களின் திட்டத்தின் ஒருபகுதிதான். திரைத்துறையின் ஆரோக்கியத்திற்காக இந்த முடிவை ஓடிடி நிறுவனத்திடம் தெரிவித்தோம். அவர்கள் ஒப்புக்கொண்டனர். ” எனத் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக, ஓடிடி தேதி உறுதிசெய்யப்பட்ட பின்பே திரையரங்க வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர். படம் திரைக்கு வந்ததும் சரியாக 4 வாரத்தில் ஓடிடியில் படம் வெளியாகிவிடும் என்பதே நடைமுறையாக இருந்தது. முதல்முறை தக் லைஃப் மூலம் அந்த நடைமுறையை மாற்றுவதற்கான முயற்சியை கமல்ஹாசன் செய்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி படத்தின் பெயரில் புதிய சீரியல்!