செய்திகள் :

காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க போப் வலியுறுத்தல்!

post image

காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார்.

அப்போது, காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடை விலக்கப்பட்டு அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இத்துடன், காஸா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

”குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கொடுக்கும் இதயத்தை நொறுக்கும் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, காஸாவினுள் போதுமான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனும் எனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே 8 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த போப் பதினான்காம் லியோ, இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், காஸாவின் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இஸ்ரேல், அப்பகுதியினுள் மருந்துக்கள், உணவுகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செல்லத் தடை விதித்துள்ளது.

இந்தத் தடைகளை உடனடியாக விலக்க வேண்டுமென பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இஸ்ரேல் அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் முதல் காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில், போதுமான உணவுகள் மற்றும் மருந்துக்கள் இன்றி லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!

உலகின் எந்த பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.ஏவுகணைத் தாக்குதலில் இரு... மேலும் பார்க்க

உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!

ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் அண்டிரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மே... மேலும் பார்க்க

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற... மேலும் பார்க்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலி... மேலும் பார்க்க