உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தர...
வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 1
1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று.
(A) வந்தாள்
(B) வந்த
(C) வந்து
(D) வந்தவர்
2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
(A) வினைமுற்றுத் தொடர்
(B) எழுவாய்த் தொடர்
(C) பெயரெச்சத் தொடர்
(D) வினையெச்சத் தொடர்
3. நீளுழைப்பு என்பதைப் பிரித்து எழுதுக
A) நீளு + உழைப்பு
B) நீண் + உழைப்பு
C) நீள் + உழைப்பு
D) நீண்ட +உழைப்பு
4. செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
A) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
C) பண்புத் தொகை
D) வினைத் தொகை
5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
A) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
B)இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
C)இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
D)வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
6. பூக்களை பறிக்காதீர் - எவ்வகை வாக்கியம் என அறிக.
A) செய்தி வாக்கியம்
B) கட்டளை வாக்கியம்
C) வினா வாக்கியம்
D) பிறவினை வாக்கியம்
7. தமிழிசை - இல்லணக் குறிப்பு அறிக.
A) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
B) வினைமுற்று
C) பண்புத் தொகை
D) வினைத் தொகை
8. மல்லிகை சூடினாள் என்பது...
A) பண்பாகு பெயர்
B) தொழிலாகு பெயர்
C) பொருளாகு பெயர்
D) காலவாகு பெயர்
9. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
A) பண்புத் தொகை
B) வினைத் தொகை
C) ஆறாம் வேற்றுமை தொகை
D) இரண்டாம் வேற்றுமை தொகை
10. பிழை திருத்தம் செய்க.
A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
11. பிழை திருத்தம் செய்க.
A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
12. மலர் வீட்டுக்குச் சென்றாள் - வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
A) செல்ல
B) சென்று
C) செல்
D) சென்ற
13. சூல், சூழ், சூள் - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
A) கருப்பம், சுற்று, சபதம்
B) சபதம், சுவர், தானியம்
C) ஆணை, முற்றுகையிடு, சருமம்
D) ஆலோசனை, ஆணை, வாயில்
14. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
B) எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
C) எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
D) எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
15. ஐ - எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
A) அரசன்
B) ஒற்றன்
C) வீரன்
D) தலைவன்
16. Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்
A) வனைவு
B) புதுமை
C) புனைவு
D) வளைவு
17. மாலதி மாலையைத் தொடுத்தாள் - இது எவ்வகை வாக்கியம்?
A) செய் வினை
B) தன் வினை
C) செயப்பாட்டு வினை
D) பிற வினை
18. சாலச் சிறந்தது - இலக்கணக்குறிப்பு அறிக.
A) இடைத் தொடர்
B) விளித் தொடர்
C) எழுவாய்த் தொடர்
D) உரிச்சொல் தொடர்
19. 'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
A) கேட்டு
B) கேட்டல்
C) கேட்ட
D) கேட்டான்
20. 'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
A) தணி
B) தணிந்து
C) தணிந்த
D) தனி
21. 'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
A) தந்த
B) தா
C) தரு
D) தந்து
22. 'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A) அரசன்
B) மதில்
C) வறுமை
D) நோய்
23. 'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A) பெரிய
B) குறைய
C) சிறிய
D) நிரம்ப
24. 'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
A) மலை
B) ஆறு
C) கடல்
D) உயிர்வகை
25. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
A) கூகை கூவும்
B) கூகை குனுகும்
C) கூகை அலறும்
D) கூகை குழறும்
விடைகள்
1. (A) வந்தாள்
2. (B) எழுவாய்த் தொடர்
3. C) நீள் + உழைப்பு
4. C) பண்புத் தொகை
5. B)இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
6. B) கட்டளை வாக்கியம்
7. D) வினைத் தொகை
8. C) பொருளாகு பெயர்
9. D) இரண்டாம் வேற்றுமை தொகை
10. C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
11. A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
12. C) செல்
13 A) கருப்பம், சுற்று, சபதம்
14. A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
15. D) தலைவன்
16. C) புனைவு
17. A) செய் வினை
18. D) உரிச்சொல் தொடர்
19. A) கேட்டு
20. A) தணி
21. B) தா
22. B) மதில்
23. A) பெரிய
24. C) கடல்
25. D) கூகை குழறும்