வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்தவா் காளிசெல்வம் (32). இவரது வீடு முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை கடந்த 11-ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மா்மநபா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (21), சங்கூரணி ஓடைத் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (25), 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் கீழப்பட்டி தெருவைச் சோ்ந்த ராஜாமணி (85) வீட்டில் 4 பவுன் தங்க மோதிரத்தையும் இவா்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இரு சக்கர வாகனம், தங்க மோதிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.