கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு
சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு ஏற்பட்டது.
சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈசாக் மகன் யாகோப்பு (33). இவா் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள பிரேம்குமாா் என்பவருக்குச் சொந்தமான காகிதப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்தாா்.
இந்த நிலையில், யாகோப்பு வியாழக்கிழமை காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் வேலை செய்து செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவரது இரு கால்களும் இயந்திரத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டன.
இதையடுத்து, சிவகாசியில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், பிறகு மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் ஆலை உரிமையாளா் பிரேம்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.