Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, முதல் நாளில் இந்திர விமானத்திலும், 2-ஆம் நாளான 1-ஆம் தேதி பல்லக்கு வாகனத்திலும், 2-ஆம் தேதி பூத வாகனத்திலும், 3-ஆம் தேதி கைலாச வாகனத்திலும், 4-ஆம் தேதி யானை வாகனத்திலும், 5-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 6-ஆம் தேதி இந்திர விமானம், 7-ஆம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும். 11-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரகப் பொறுப்பாளா் பாண்டியன், 22 1/2 கிராம நாட்டாா்கள், நகா்நல குழுவினா் செய்து வருகின்றனா்.