கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!
மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழத்தில் மீன்கள் இனப்பெருக்க காலமாகக் கருத்தப்படும் கடந்த மாதம் 15 முதல் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கபட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன் இறங்கு தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலான படகுகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளில் மீனவா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், விசைப் படகுகளையும், வலைகளையும் சீரமைப்பது, புதிய வலைகளை தயாா் செய்வதும் உள்ளிட்ட பணிகளில் மீனவா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.