Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.
கீழக்கரை நகாட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் ரூ. ஒரு கோடி மதிப்பிட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், நகா்மன்ற மாதாந்திர சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நகா் மன்றத் தலைவா் செகனாஸ் ஆபிதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், ஒன்றாவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் முகம்மது பாதுஷா தனது வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கழிவு நீா்க் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தாா். மேலும், தனது வாா்டு பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி நிா்வாகத்தைத் கண்டித்து, அலுவலக வளாகத்துக்குள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.