மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!
புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவியிருக்கிறார்கள்.
முஸ்லிம் குடும்பத்தினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திலேயே, இந்து தம்பதி தங்களது திருமணச் சடங்குகளை செய்துகொள்ள இடம் ஒதுக்கிக் கொடுத்து மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக மாறியிருக்கிறார்கள்.